சிபெற்கோவிற்கு வரவேற்கின்றோம்

இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம், 1961 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க பாராளுமன்றச் சட்டம் மற்றும் அதனை தொடர்ந்த மேலும் திருத்தங்களினால் அரச தொழில் முயற்சியொன்றாக தாபிக்கப்பட்டது. கூட்டுத்தாபனத்தின் பிரதான குறிக்கோள்கள் பின்வருமாறு:

"பெற்றோலிய உற்பத்திகளின் இறக்குமதியாளர், ஏற்றுமதியாளர், விற்பனையாளர் மற்றும் விநியோகத்தர் ஒருவராக தொழில் நடதத்துதல். பெற்றோலியத்தினை அகழ்தல், உற்பத்தி செய்தல் மற்றும் சுத்திகரித்தல் போன்றவற்றுக்கான கண்டறிதல் ஆய்வுத் தொழிற்பாட்டினை நடாத்துதல் அத்துடன் குறிக்கோள்களை அடையும் பொருட்டு இடைநேர்விளைவான அல்லது ஆக்கபூர்மான ஏதேனும் அத்தகைய தொழிற்பாட்டினை நடாத்துதல்".

எமது நோக்கு

தேசத்தின் சுபீட்சத்திற்கு பங்களிப்புச் செய்து பிராந்தியத்தில் பெற்றோலியம் மற்றும் அதனோடிணைந்த கைத்தொழிலில் வாடிக்கையாளர் விரும்பத்தகு, நம்பகத்தகு, சூழல் நட்புமிகு தொழில்முயற்சியில் முதன்மை பெற்று விளங்குதல்

எமது பணி

ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் சூழல் பற்றிய மிகுந்த கரிசனையுடனும் பங்குதாரர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்வதுடனும் கூடிய அனைத்து செயற்பாடுகளிலும் தொழிலாளர் பங்களிப்பினை ஈடுபடுத்தல், புதுமை படைத்தல் மற்றும் உயர்ந்த ஒழுக்க விழுமியங்களை பேணுதல் என்பவை ஊடாக தொழில்முயற்சியின் வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்காக முன்னேற்றமடைந்த தொழில்நுட்பத்தினை பயன்படுத்துகின்ற அதேவேளை விசுவாசமும் வினைத்திறனுமிக்க விநியோகத்தர் வலைப்பின்னலொன்றினூடாக வாடிக்கையாளர் எதிர்பார்ப்புக்களையும் விஞ்சுகின்ற அனைத்து தீர்வுகளையும் சேவைகளையயும் வழங்குவதனூடாக உயர்தரமிக்க பெற்றோலிய சுத்திகரிப்பு, விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் ஆகிய செயற்பாடுகளில் தலைசிறந்த தரத்தினை அடையப் பெறல்.

Our Own Visitors

Locations of visitors to this page

தொடர்கொள்ள:

இலங்கைப் பெற்றோலிக் கூட்டுத்தாபனம்,
இல. 609, கலாநிதி டானிஸ்டர் டி சில்வா மாவத்தை,
கொழும்பு 09.
தொலைபேசி: + 94 5455455
இணையத்தளம்: www.ceypetco.gov.lk